Close Menu
    What's Hot

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாடு சட்டப்பேரவையில் மைக்கை அணைத்தனர்! ஆளுநர் மாளிகை அறிக்கை
    அரசியல்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மைக்கை அணைத்தனர்! ஆளுநர் மாளிகை அறிக்கை

    Editor web1By Editor web1January 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Governer 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து மக்கள் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    1. ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    2. ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் இருந்ததாகவும், மக்கள் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    3. ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4வது பெரிய மாநிலமாக இருந்ததாகவும், தற்போது 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    4. போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    5. பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள மக்கள் மாளிகை, போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    6. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வரும்நிலையில், உரையில் அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    7. தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுவதாகவும், ஆனாலும், இது அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    8. கல்வித் தரத்தில் தொடர் சரிவைக் கண்டு இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  50% ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதாகவும் மக்கள் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    9. பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வழங்கிய உரையில் ஒரு குறிப்பு கூட இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    10. தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதாகவும், கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
    11. சிறு குறு தொழில்துறைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. நாட்டில் 5.5 கோடிக்கும் அதிகமாக MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், தமிழகத்தில் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் தங்களின் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் நிறுவும் கட்டாயத்தில் உள்ளனர். இந்த தகவல்கள் இல்லை என்றும் மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    12. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும், அவர்கள் பதற்றத்துடனும், விரக்தியுடனும் இருப்பதாகவும் அவர்களின் குறைகளைத் தீர்க்க வழிமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
    13. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள் மாளிகை வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் ரகுபதி
    Next Article ஜனநாயகன் ரிலீசாவதில் என்ன பிரச்சனை – விஜய் தரப்பு காரச்சார வாதம்
    Editor web1
    • Website

    Related Posts

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    July 2, 2026

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    July 2, 2026

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.