Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஓய்வை மறந்திடு; வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு!. திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!
    தமிழ்நாடு

    “ஓய்வை மறந்திடு; வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு!. திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

    Editor web3By Editor web3January 21, 2026Updated:January 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சியில் மார்ச் 8ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில் சுழல வேண்டும்! இளைஞரணி நிர்வாகிகள் மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டங்கள், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு என இனி ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளும் பரப்புரைகளும் தமிழ்நாட்டை நிறைக்கப் போகின்றன.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்: பிப்-1 முதல் மார்ச்-8 வரை வாக்குச்சாவடி தோறும் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களை வீடு வீடாகச் சென்று விளக்கி, கழகத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும்.

    பிப்-1 முதல் பிப்-28 வரை, நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நான்கு இடங்களில் தெருமுனை அல்லது அரங்கக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை.

    BLA, BLC, BDA ஆகியோரைத் தேர்தல் பணிக்குத் தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப் -11 தாம்பரத்திலும், பிப்-14 திருப்பத்தூரிலும், பிப்-21 மதுரையிலும், பிப்-27 கோவையிலும் நடத்த முடிவு.

    மார்ச் -8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில். ‘ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு” நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் – அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்!
    Next Article எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்!. திமுகவில் இணைப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.