Close Menu
    What's Hot

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கரூர் விவகாரம்!. பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!.
    இந்தியா

    கரூர் விவகாரம்!. பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!.

    Editor web3By Editor web3January 21, 2026Updated:January 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur Stampede 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இக்கட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி விஜய் தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தேசிய அளவில் அதிவலைகளை ஏற்படுத்து இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகளின் விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தி விஜய்க்கு சம்மன் அனுப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது. தொடர்ந்து விஜய் சிபிஐ விசாரணைக்காக 2-வது முறையாக கடந்த 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

    இந்தநிலையில், இந்த வழக்கை தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. ஆனால் கரூர் வழக்கை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என தவெக தரப்பிலும், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல தனி நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வழக்கு விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கரூர் சென்ற சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

    அதன் பின் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடமும், தவெக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தியதோடு தவெக தலைவர் விஜய்யை இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி சுமார் 13 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலவரம், விபரங்கள் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 3ம் தேதி கரூர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுடன் ஆலோசனை நடத்தி சி.பி.ஐ தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுடன் பங்காளி சண்டை மட்டுமே!. கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்!
    Next Article எடுபடாத செங்கோட்டையன் பேச்சு!. வைத்தியலிங்கத்தை அலேக்கா தூக்கிய செந்தில் பாலாஜி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    June 20, 2026

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    June 20, 2026

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.