ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் விரைவில் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்றும் அதாவது திமுகவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிலும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஆனால், தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் இழக்கவேண்டும் என்று ஓபிஎஸிடம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இன்று காலை டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இந்துவிட்டார். திமுகவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற ஒற்றை முயற்சியிலேயே டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல் ஓபிஎஸை இணைத்துக்கொள்ளவும் பழனிசாமி ஒத்துக்கொண்டுவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மீண்டும் ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது, அப்படி கூட்டணியில் இந்துவிட்டால் ஓபிஎஸுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஓபிஎஸ் மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருகை நெருங்கிவிட்டதால் கூட்டணியை இறுதி செய்ய தலைவர்கள் தீவிரம்காட்டியுள்ளன.
