Close Menu
    What's Hot

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!. இபிஎஸ் உறுதி!.
    தமிழ்நாடு

    நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!. இபிஎஸ் உறுதி!.

    Editor web3By Editor web3January 22, 2026Updated:January 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு காலை விருந்தளித்தார். இதனை தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பியூஸ் கோயல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அவர்களுடன் காலை உணவை அருந்தினோம். பழனிச்சாமி என்னுடைய நல்ல நண்பர் அவருடைய தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது.

    ஊழலில் நிறைந்து இருக்கக்கூடிய திமுக அரசை அகற்றுவதற்கு நாங்கள் வியூகம் அமைத்து வருகிறோம் தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகள் இளைஞர்கள் ஆகியோர் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளனர். குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் தயாராகி விட்டார்கள். உதயநிதி அவதூறு பேச்சுகளை பேசி வருகிறார். அவரை அரசியல் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். நாளை நடைபெற இருக்கக்கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் நாளை பிரதமர் வருகிறார் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    பிரதமரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பொதுக்கூட்டத்திற்கு வர உள்ளனர். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் எப்படி எல்லாம் மக்கள் கலந்து கொள்கிறார்கள் எப்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசித்தும் நாளை நடைபெறுகின்ற கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கூட்டம் சுமார் 5 லட்சம் பேர் அந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    இந்த தொடக்கம் எங்களுடைய கூட்டணிக்கு வெற்றிக்கு அச்சாணியாக இருக்கும் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இருக்கிறது இந்த அரசாங்கம் எல்லாத்துறைகளிலும் தோல்வியை கண்டு இருக்கிறது ஊழல் நிறைந்து இருக்கின்றன 4 லட்சம் கோடி பல துறைகளில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என மேதகு ஆளுநர் அவர்களிடம் அறிக்கையை அளித்திருக்கிறோம்

    எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி பாரத பிரதமர் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா எதிர்காலத்தில் ஒரு வல்லரசு நாடாக உருவாக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு இருக்கிறார் இன்றைக்கு அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் இந்த தேர்தல் மூலமாக திமுக வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!
    Next Article அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் குன்னம் ராமச்சந்திரன்!. கண்ணீருடன் பேட்டி!
    Editor web3
    • Website

    Related Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    June 2, 2026

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    June 2, 2026

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.