Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»”பனையூர் பண்ணையார்; ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்”!. அதிமுக பதிலடி!
    தமிழ்நாடு

    ”பனையூர் பண்ணையார்; ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்”!. அதிமுக பதிலடி!

    Editor web3By Editor web3January 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS and Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யின் விமர்சாத்துக்கு பனையூர் பண்ணையார் என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

    ‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!

    தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?

    இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?

    ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!

    அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
    கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?

    நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
    ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
    நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
    என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
    72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ?
    அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!

    உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
    இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!

    கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.

    அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!

    நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு,
    பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக என்று பதிவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவிடம் சரண்டர்.. எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்? விஜய் பரபரப்பு பேச்சு!
    Next Article அபிஷேக் சர்மா சரவெடி!. ஹாட்ரிக் வெற்றி!. டி20 தொடரை வென்றது இந்தியா!. 
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    June 15, 2026

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.