Close Menu
    What's Hot

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»77-வது குடியரசு தினம்!. தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
    தமிழ்நாடு

    77-வது குடியரசு தினம்!. தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

    Editor web3By Editor web3January 26, 2026Updated:January 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    republic day 2026 chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

    நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!. யார் யார் தெரியுமா?
    Next Article வீர தீர செயல்களுக்கான விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.