Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குட்நியூஸ்!. தமிழகத்தில் இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    தமிழ்நாடு

    குட்நியூஸ்!. தமிழகத்தில் இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    Editor web3By Editor web3January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    HPV vaccine tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவிலேயே முதல் முறையாக, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்புடன் இருக்கக்கூடிய, 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். மேலும் ஏறக்குறைய 79,000 பெண்கள் இந்த நோயால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

    மற்ற பல புற்றுநோய்களைப் போலல்லாமல், இதை பெரும்பாலும் தடுக்க முடியும். நவீன மருத்துவமானது எச்.பி.வி தடுப்பூசி, வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால விழிப்புணர்வு போன்ற சக்திவாய்ந்த வழிமுறைகளை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும். தடுப்பூசியை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை தடுக்க முடியும்.

    இந்தநிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.  14 வயது பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போடும் திட்டத்தை, முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இதில் தமிழ்நாட்டில் 14 வயதுக்குட்பட்ட 3,38,649 பெண்களுக்கு முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ரூ.28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையன் கேட்டார்; மறுக்க முடியாமல் தயக்கமாக இருந்தேன்!. டிடிவி தினகரன் பதில்!
    Next Article பாதுகாப்பு உற்பத்தி முதல் பயங்கரவாத எதிர்ப்பு வரை!. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து!.
    Editor web3
    • Website

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.