Close Menu
    What's Hot

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனல் பறக்கும் அரசியல் களம்!. இன்று முதல் அதிமுக தீவிர பிரச்சாரம்!. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
    தமிழ்நாடு

    அனல் பறக்கும் அரசியல் களம்!. இன்று முதல் அதிமுக தீவிர பிரச்சாரம்!. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

    Editor web3By Editor web3January 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps angry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தினாலும், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, திமுக ஆட்சிக்கு எதிராக, “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK Connect செயலியை பயன்படுத்தி,

    கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, ஜெயலலிதாவின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும்; அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சியில், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கிச் சொல்லும் இந்தப் பிரச்சார திட்டத்திற்கான முன்னெடுப்பும், அதனைத் தொடர்ந்து களப் பணிகளும் நடைபெறும்.

    சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் இப்பணியை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக மேற்கொள்ள உள்ள இந்தப் பிரச்சாரங்களின்போது, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்ஜெட் கூட்டத்தொடர் 2026!. ஜனாதிபதி உரையின் சிறப்பம்சங்கள்!.
    Next Article ஹெலிகாப்டர்கள், விமான விபத்துக்களில் உயிரிழந்த தலைவர்கள்.!
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    Trending Posts

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.