Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெண்கள் பாதுகாப்பிலும் பொய்!. அமைதியான தமிழகத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது திமுக!. அண்ணாமலை ஆவேசம்!.
    தமிழ்நாடு

    பெண்கள் பாதுகாப்பிலும் பொய்!. அமைதியான தமிழகத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது திமுக!. அண்ணாமலை ஆவேசம்!.

    Editor web3By Editor web3January 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin and Annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசு, அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில்,  “சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.

    முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி.

    கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசு, அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.

    குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய UGC விதிகளுக்கு தடை விதிப்பு!. உச்சநீதிமன்றம் அதிரடி!
    Next Article அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்!. கண்ணீர் மல்க பிரியாவிடை!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.