Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தரமற்ற உணவை வழங்கி, தூய்மை பணியாளர்களை அவமானப்படுத்தும் திமுக!. அண்ணாமலை தாக்கு!
    தமிழ்நாடு

    தரமற்ற உணவை வழங்கி, தூய்மை பணியாளர்களை அவமானப்படுத்தும் திமுக!. அண்ணாமலை தாக்கு!

    Editor web3By Editor web3January 30, 2026Updated:January 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், “தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தபோது, கூடுதல் ஊதியம் வழங்காமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் விளம்பர நாடகம் நடத்தினார் முதலமைச்சர்.

    மேலும், ஊதிய உயர்வு கேட்ட தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூரில், குப்பை அள்ளும் வாகனத்தில், அவர்களுக்கான உணவு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்றும், திமுக அரசு வழங்கும் இந்த உணவை உண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அது மட்டுமின்றி, இந்த தரமற்ற உணவைக் கூட, அவர்களை வெகுநேரம் காத்திருக்க வைத்தே வழங்குகிறது திமுக அரசு.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவர்களது ஆழ்மனதில், அவர் கடையேழு வள்ளல்களில் ஒருவர் என்ற எண்ணத்தை யாரோ விதைத்துள்ளார்கள் போலும். நியாயமான ஊதிய உயர்வு கொடுப்பதை விட்டுவிட்டு, தரமற்ற உணவை வழங்கி, பொதுமக்களுக்கான சுகாதாரப் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    மக்கள் வரிப்பணத்தில், மக்கள் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால், எதற்காக வெட்டி விளம்பரங்கள் உங்களுக்கு?

    தூய்மைப் பணியாளர்கள் யாரும், உணவுக்காக உங்களிடம் வந்து நிற்கவில்லை. தங்கள் பணிகளை, நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ளும் அவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருப்பதை ஏற்கவே முடியாது.

    உடனடியாக, தரக்குறைவான உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உணவு வழங்கும் விளம்பர நாடகத்தை நிறுத்திக் கொண்டு, அவர்களுக்கான நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கிரிக்கெட்டில் எனக்கு மரியாதை இல்லை; யாரிடம் நிரூபிக்க இதை செய்கிறேன்”!. யுவராஜ் சிங் ஓபன் டாக்!
    Next Article காங்கிரஸுக்கும் திருப்பி அடிக்க தெரியும்!. திமுக எம்.எல்.ஏ தளபதிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.