Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு?. தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
    தமிழ்நாடு

    ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு?. தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    Editor web3By Editor web3February 2, 2026Updated:February 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk mango
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

    இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

    இந்தநிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில், கட்சியின் உறுப்பினராக இல்லாத முன்னாள் தலைவர் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதனால் அந்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அன்புமணி தரப்பில், கட்சி தன் வசம் தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதபதிகள், வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் வாதங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர். பின்னர், ராமதாஸ் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் தவெக!. விஜய் பதிவு!.
    Next Article மத வன்முறையை தூண்டும் பாஜக; துணைப்போகும் அதிமுகவின் சதியை முறியடிப்போம்!. முதல்வர் ஸ்டாலின் மடல்!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.