Close Menu
    What's Hot

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை தாறுமாறாக உயர்வு!. சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!. இல்லத்தரசிகள் ஷாக்!
    தமிழ்நாடு

    தங்கம் விலை தாறுமாறாக உயர்வு!. சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!. இல்லத்தரசிகள் ஷாக்!

    Editor web3By Editor web3February 4, 2026Updated:February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold feb 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.22,800 வரை குறைந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் உயரத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் இன்றும் (பிப்.4) சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கும் சவரன் ரூ.5040 அதிகரித்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது.

    இருப்பினும்,  கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி அன்று தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,800க்கு விற்பனையானது. இதேபோல் 31ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,200க்கு விற்பனையானது.  அதே நேரத்தில் கடந்த 30ம் தேதி, 31ம் தேதி, 1ம் தேதி (தங்கம் மார்க்கெட் விடுமுறை), தொடர்ந்து நேற்று என 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22,800 குறைந்தது.

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்க விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் (பிப்.02) காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-ஆக உள்ளது. கடந்த 3 நாட்களில் தங்க விலை மொத்தம் ரூ.22,800 வரை சரிந்தது.

    ஆனால் நேற்று முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (பிப்.4) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கும் சவரன் ரூ.5040 அதிகரித்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.320க்கும், ஒரு கிலோ ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கும் விற்பனியாகிறது,

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleWPL 2026!. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அபாரம்!. GG-ஐ வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது!. 
    Next Article மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!. இருவிமானங்கள் உரசிக்கொண்டதால் அதிர்ச்சி!.
    Editor web3
    • Website

    Related Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    June 13, 2026

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.