Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“முட்டை” போஸ்டர்கள்!. மத்திய பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!.
    தமிழ்நாடு

    “முட்டை” போஸ்டர்கள்!. மத்திய பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!.

    Editor web3By Editor web3February 4, 2026Updated:February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Egg posters
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ் நாட்டிற்குகான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    இந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடு முழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இதன் படி ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு “கலாச்சார மையம்” (Experiential Cultural Center) அமைக்கப்பட உள்ளது.

    பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக அரிய கனிம வழித்தடம் (Rare Earth Corridor) அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் ஒடிசா ,கேரளா ,ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ் நாட்டின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் துறை நெருக்கடியில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம் மானது ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது,

    ஆனால், மத்திய பட்ஜெட் எப்போதும் போல, தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் ஏமாற்றமே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் ”முட்டை” போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!. இருவிமானங்கள் உரசிக்கொண்டதால் அதிர்ச்சி!.
    Next Article ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது?. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!.
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.