Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது?. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!.
    தமிழ்நாடு

    ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது?. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!.

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5531mkstalin1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா- சீனா எல்லை பிரச்சனை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

    இதற்கு பாஜக எம்.பி. க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் வெளியிடப்படாத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து பேசவே நேற்று முன் தினம் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின.

    தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் குடியரசுத் தலைவரின் உரை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி இந்திய-சீனா எல்லை பிரச்சனை குறித்தும் அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர்.

    மீண்டும் அவை தொடங்கிய போது மத்திய நாடாளுமன்ற அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்ட காரணத்துக்காக 374 -வது பிரிவின் கீழ் இந்த அமர்விலிருந்து 8 எம்பிக்களை நீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இதையடுத்து இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்களான மாணிக்கம் தாகூர் (தமிழ்நாடு) , ஹிபி இடன் (கேரளா) , அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் (பஞ்சாப்), குர்ஜீத் சிங் அவுஜ்லா – (பஞ்சாப்), பிரசாந்த் யாதோராவ் படோல் (மகாராஷ்டிரா), டீன் குரியகோஸ் (கேரளா), சாமளா கிரண் குமார் ரெட்டி (தெலங்கான) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு. வெங்கடேசன் (தமிழ்நாடு)  உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் நடப்பு தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    https://x.com/mkstalin/status/2018914232222548334

    இந்தநிலையில், 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், அரசாங்கம் அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய முதல்வர், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“முட்டை” போஸ்டர்கள்!. மத்திய பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!.
    Next Article உலகின் பொறுப்புள்ள நாடுகள்!. டாப் 10-ல் இல்லாத சீனா, ரஷ்யா, US!. இந்தியாவின் நிலை என்ன?.
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.