Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»குட்நியூஸ்!. ரேஷன் அட்டைக்கு சிலிண்டர் இலவசம்!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
    இந்தியா

    குட்நியூஸ்!. ரேஷன் அட்டைக்கு சிலிண்டர் இலவசம்!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gas cylinder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு முன்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களுக்கான ரொக்கம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

    டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வாக்குறுதி அளித்திருந்தது.

    தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி (AAP) பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதைக் குறிப்பிட்டு AAP, அரசை குற்றம்சாட்டியுள்ளது.

    இதற்கு பதிலளித்துள்ள ஆளும் பாஜக, ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகே நிதி உதவி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தலைநகர் டெல்லியில், ஒரு எல்பிஜி சிலிண்டரின் தற்போதைய விலையான ரூ.853, ஹோலி பண்டிகைக்கு முன்பாக ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்றும், இதேபோல் தீபாவளிக்கு முன்பாக அப்போதைய எல்பிஜி விலையின் அடிப்படையில் மற்றொரு தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரேகா குப்தா நேற்று அறிவித்துள்ளார்.

    முன்னதாக, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம்  பேசிய முதல்வர் ரேகா, டெல்லியில் உள்ள சுமார் 17.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இந்த நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தால் பயனடைவார்கள் என்றும் டெல்லி அரசாங்கம் தனது அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிஜமாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

    இருப்பினும், பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி குறித்து அவர் குறிப்பிடவில்லை.

    மேலும், எல்பிஜி விலையில் ஏற்படும் மாற்றங்கள், மத்திய அரசின் மானியங்கள் மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சரிசெய்யப்படும் நேரடி நிதி பரிமாற்ற (DBT) திட்டத்திற்காக ரூ.242.77 கோடி செலவிடப்படும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டம் வெறும் நிதி உதவி மட்டுமல்ல; பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு மரியாதையும் நிவாரணமும் வழங்கும் ஒரு முயற்சியாகும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு தெளிவான பட்ஜெட் ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

    தற்போது டெல்லியில் ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.853 ஆக உள்ளது. பிரதான் மந்திரி உஜ்ஜ்வலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் வரும் பயனாளர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.300 மானியத்தை கழித்த பின், ஒரு சிலிண்டருக்கு ரூ.553 நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உஜ்ஜ்வலா திட்டத்தின் கீழ் வராத, ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு முழுத் தொகையான ரூ.853 உதவியாக வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களோட வந்துடுங்க..! எத்தனை தொகுதிகள் வேணும்? அள்ளித் தரோம்..! காங்.,-க்கு தவெக அழைப்பு?
    Next Article நானே ஒரு தளபதி FAN..! அவர் கூறியது தனிப்பட்ட கருத்து..! அதில் உடன்பாடு இல்லை..!
    Editor web3
    • Website

    Related Posts

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.