Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதியோர் ஓய்வூதியம் உயர்வு; கல்வி கடன் தள்ளுபடி!. அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!.
    தமிழ்நாடு

    முதியோர் ஓய்வூதியம் உயர்வு; கல்வி கடன் தள்ளுபடி!. அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!.

    Editor web3By Editor web3February 4, 2026Updated:February 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.  
    அதில், முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்:
    சமூக ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
    வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு வங்கிகளில் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அந்த தொகையை அரசே ஏற்கும்.
    ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்: வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
    ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
    அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
    ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதற்காக, தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கனவே இருந்த பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.
    கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி: இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த மகளிர் சுய தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
    மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேதியை அறிவித்தும் மௌனம் காக்கும் பிரேமலதா!. அதிருப்தியில் நிர்வாகிகள்…!
    Next Article அஜித் குமாரின் மரணம், ”காவல் மரணம்” என்பது உறுதி!. சிபிஐ அதிரடி ரிப்போர்ட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.