Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அஜித் குமாரின் மரணம், ”காவல் மரணம்” என்பது உறுதி!. சிபிஐ அதிரடி ரிப்போர்ட்!.
    தமிழ்நாடு

    அஜித் குமாரின் மரணம், ”காவல் மரணம்” என்பது உறுதி!. சிபிஐ அதிரடி ரிப்போர்ட்!.

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajith kumar murder case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரண விவகாரத்தில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என்று கூறிய நீதிபதி, புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    2025ம் ஆண்டு ஜூன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற இளைஞர் மீது கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரில் கோவில் காவலாளி கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவலாளி அஜித்குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் வழங்கக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.

    சிபிஐ தரப்பில், ” அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சிபிஐ தரப்பில், “அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதி, “ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.

    “முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதி, ” யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம் என குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதியோர் ஓய்வூதியம் உயர்வு; கல்வி கடன் தள்ளுபடி!. அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!.
    Next Article  ​​”இது எனது போராட்டம் அல்ல; மக்களின் போராட்டம்”!. SIR வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மம்தா பானர்ஜி வாதம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.