Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருகிறார்!. செல்வப்பெருந்தகை கிண்டல்!
    தமிழ்நாடு

    கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருகிறார்!. செல்வப்பெருந்தகை கிண்டல்!

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் முதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார் என்று, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருவதாக செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு குன்றத்தூர் ஒன்றியத்தில் 1654 கல்லூரி மாணவர்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 300 கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்க நினைக்கின்ற மோடி அரசை கண்டித்து நாளை தாம்பரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப் போவதாகவும் இந்த பேரணியில் தெலுங்கானா துணை முதலமைச்சர் விக்ரம் சிங் பட்டி அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறினார்.

    அகமதாபாத்தில் இருந்து மும்பை, குஜராத்தில் இருந்து மும்பை வரை புல்லட் ட்ரெயின் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை. ஒன்றிய பாஜக அரசால் தமிழகத்தில் எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை, இருக்கின்ற ஆட்சி தொடர போகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக தொடர்வார்.

    தமிழ்நாட்டிற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய பாஜக அரசை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக முழுவதுமாக தமிழ்நாட்டை நிராகரித்தார்கள் இதுதான் எதார்த்தம்

    ஒன்றிய அரசு மோடி அரசு தமிழ்நாட்டை பன்னிரண்டு ஆண்டுகளாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டை புறம் தள்ளி இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மறக்கிறார்கள் ஆகவே தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் மோடி அரசுக்கும் பாஜக கட்சிக்கும் தொங்கு சதையாக இருக்கின்ற அதிமுக உட்பட ஒரு சில கட்சிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்.

    முதல்வர் மு க ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தபோது எழுப்பி கேட்டால் விசில் சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று விஜய் கூறியதை கேள்வி கேட்டபோது, அதற்கு பதில் அளித்து செல்வப் பெருந்தகை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பேசினால் நாம் என்ன சொல்வது என்று சிரித்தபடியே பதில் அளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கட்டும்!. EPS பதிலடி!
    Next Article மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!. மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!.
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.