Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»வாணவேடிக்கை காண்பித்த இஷான் கிஷன்!. பயிற்சி ஆட்டத்திலேயே இப்படியா?. சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?
    விளையாட்டு

    வாணவேடிக்கை காண்பித்த இஷான் கிஷன்!. பயிற்சி ஆட்டத்திலேயே இப்படியா?. சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?

    Editor web3By Editor web3February 5, 2026Updated:February 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ishan Kishan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷனின் வாணவேடிக்கை ஆட்டத்தால், டி20 போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் 11ல் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

    டி20 உலக்கோப்பைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டன. இந்தநிலையில் பிப்.7 அன்று போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில், நேற்று இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக கிஷன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன், வெறும் 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல், திலக் வர்மாவும் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம், இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 240ரன்கள் குவித்தது.

    அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த அதிரடியான இன்னிங்ஸின் மூலம், கிஷன் விளையாடும் XI-ல் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் தேர்வாளர்களிடம் தனது திறமையை வலுவாக வெளிப்படுத்தியுள்ளார். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், வெறும் 20 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஏழு பிரம்மாண்டமான சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்து ஒரு சக்திவாய்ந்த இன்னிங்ஸை விளையாடினார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கிஷன் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார்.

    அவரது இந்த ஆட்டம், உலகக் கோப்பையில் அபிஷேக்குடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கத் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளது.

    முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்ட சஞ்சு சாம்சன் மொத்தமாகவே வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தார். மேலும் முதல் 4 போட்டிகளில் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்ட சஞ்சு விடம் இருந்து 5வது போட்டியில் விக்கெட் கீப்பிங் கிளவுஸ்ம் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இசான் கிஷன் கீப்பராக செயல்பட்டது குறிப்படத்தக்கது.

    அணியின் மிடில் ஆர்டரில் ஆக்ரோஷம் காட்டி வந்த திலக் வர்மா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். திலக் வர்மாக உலகக்கோப்பை தொடருக்குள் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திலக் வர்மா அணிக்கு திரும்பும் பட்சத்தில் சஞ்சுவின் மிடில் ஆர்டர் இடமும் கேள்விக்குறியாக்கப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article18 நாட்களுக்குள் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்கப்படும்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…
    Next Article ரிஷிவந்தியத்தில் போட்டியிட விரும்பும் பிரேமலதா? யாருடன் தான் கூட்டணி.. எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை?
    Editor web3
    • Website

    Related Posts

    கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் நெய்மர்..!! ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என உருக்கம்..!!

    July 6, 2026

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    July 6, 2026

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.