Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் அதிமுக பிரமுகர் படுகொலை!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் அதிமுக பிரமுகர் படுகொலை!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    Editor web3By Editor web3February 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    நான் அடிக்கடி சொல்லி வருகிறேன் – இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே?

    தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை? இதற்கு உள்ளபடியே மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். உயிரிழந்த செந்தில் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், செந்தில் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன் – தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்”! என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவில் ‘மிகவும் மோசமான கிரிமினல்ஸ்!. லிஸ்ட்டில் 89 இந்தியர்கள்!. 
    Next Article “வாயை மூடுங்க..” – ஆப்சென்ட் ஆன அமைச்சருக்கு டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.