Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“வாயை மூடுங்க..” – ஆப்சென்ட் ஆன அமைச்சருக்கு டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    “வாயை மூடுங்க..” – ஆப்சென்ட் ஆன அமைச்சருக்கு டோஸ் விட்ட முதல்வர் ஸ்டாலின்!

    Editor web3By Editor web3February 6, 2026Updated:February 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm warning minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர் காந்தியை அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    சென்னை கலைவாணர் அரங்கில் பிப்.05 ஆம் தேதியான நேற்று காலை நடைபெற்ற மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, த.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். ஆனால், கைத்தறி துறை சார்பில் நடந்த அந்த நிகழ்வில் துறை சார்ந்த கைத்தறி & துணி நூல் துறை அமைச்சரான காந்தி பங்கேற்கவில்லை. இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் கொடுத்திருக்கிறது. இதையடுத்து அமைச்சர் காந்தியிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளிடம் உத்தரவிட்டுவிட்டு தலைமைச்செயலகம் சென்ற முதல்வர் அங்கு நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை, பால்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்தார்.

    மறுபுறம் அதிகாரிகள் கொடுத்த தகவலை கேட்டதும் பதறிப்போய் ஓடிவந்த அமைச்சர் காந்தி பல்வேறு துறைகளின் திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்த முதல்வருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதை கோபத்தோடு வாங்கிய முதல்வர், காலை நடந்த நிகழ்வில் பங்கேற்காததற்காக கடிந்து கொண்டுள்ளார். உடனே அமைச்சர் காந்தி விளக்கமளிக்க முயற்சிக்க, “வாயை மூடுங்க” என முதல்வர் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்த அமைச்சர் கே.என்.நேருவும் காந்தியை சற்றே அதட்டி ஓரமாக நிற்க வைத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டார தகவல்கள். நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டிய அமைச்சர் காந்தி, நகராட்சி நிர்வாகம் தொடர்பான மற்றொரு நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் கண்டிப்பிற்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் காந்தி பங்கேற்றிருந்தார்.

    முதல்வர் பங்கேற்கும் தனது துறை சார்ந்த ஒரு நிகழ்வையே அமைச்சர் புறக்கணித்ததும், அதற்காக அதிகாரிகள் மற்றும் கேமரா முன்னிலையிலேயே முதல்வர் அமைச்சரை கண்டித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் அதிமுக பிரமுகர் படுகொலை!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
    Next Article அவங்க வெறும் வாக்குறுதிகளை கொடுக்க மட்டும் தான் செய்வாங்க..! நாங்க அத நிறைவேற்றுவோம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    June 10, 2026

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.