Close Menu
    What's Hot

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»260 பேரை பலி கொண்ட விமான விபத்து!. திட்டமிட்டே நடந்தது!. பரபரப்பு தகவல்!
    இந்தியா

    260 பேரை பலி கொண்ட விமான விபத்து!. திட்டமிட்டே நடந்தது!. பரபரப்பு தகவல்!

    Editor web3By Editor web3February 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Air India plane crash issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமான விபத்தை அதன் விமானி செய்திருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய விமான விபத்தில், விமானப் பயணிகள் 241 போ் உள்பட 260 போ் பலியாகினர்.

    முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்பட்டது.

    மேலும், விபத்து மதியம் 1.40 மணியளவில் நிகழ்ந்திருக்கும் நிலையில், 11.17 மணியிலிருந்து என்ன நடந்தது என்பது குறித்த தகவலும் வெளியானது, மேலும், விமானிகளின் அறையில் இருக்கும் குரல் பதிவில், ஒரு விமானி, ஏன் எரிபொருளை சுவிட்சை அணைத்தீர்கள் என்று கேட்கிறார், அதற்கு மற்றொரு விமானி நான் எதையும் செய்யவில்லை என்கிறார். அதற்குள், விமானம் நிலைப்பாட்டை இழந்து கீழே இறங்குகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்து நேரிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதாவது, விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

    இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் வன்மையாக மறுத்துள்ளனர். விமானத் தயாரிப்பு நிறுவனத்தையும் விமான நிறுவனத்தையும் காப்பாற்றவே இறந்த விமானிகள் மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் சூதாட்ட விவகாரம்!. தோனி ரூ.10 லட்சம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு!
    Next Article “கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளது”!. செல்லூர் ராஜு விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.