Close Menu
    What's Hot

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ. 5,000 வரவு!. தோல்வி பயத்தில் ஸ்டாலின் என்னவெல்லாம் செய்கிறார் பார்த்தீர்களா?. EPS தாக்கு!
    தமிழ்நாடு

    ரூ. 5,000 வரவு!. தோல்வி பயத்தில் ஸ்டாலின் என்னவெல்லாம் செய்கிறார் பார்த்தீர்களா?. EPS தாக்கு!

    Editor web3By Editor web3February 13, 2026Updated:February 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13156438 mkstalinvseps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகளிரின் உரிமைத் தொகை கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது தோல்வி பயமே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    பிப்ரவரி மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான தொகை ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 இன்று காலை மகளிர் உரிமைத் தொகை கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

    மேலும், திமுக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ”தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா ஸ்டாலின் அவர்களே?

    சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது “தேர்தல் நேரத்து பணம்” வரவு வைக்கும் இந்த “பேட்ச்வொர்க் (Patchwork)” வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே “ரூ.3,50,000”! இதை ’விடியே ஆட்சி வீட்டு பில்லே சாட்சி’ என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது “மாதம் 2000 ரூபாய்” என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே…

    யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து “ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்” என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. “அனைத்து குடும்ப அட்டைக்கும்” என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு “குல விளக்குத் திட்டம்” முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் “மாதம் ரூ.2000” என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுட்நியூஸ்!. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி!. தடையை நீக்கிய கர்நாடக அரசு!.
    Next Article ஷாக்!. திடீரென எடை குறைந்த அபிஷேக் சர்மா!. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.