மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்று அதிமுகவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது “ஏய் விஜய் வீட்டை விட்டு வெளிய வா” என சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என தெரியுமா என கேள்வி எழுப்பிய விஜய், தாய்நாடான தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலமாக இருக்கலாம். ஆனால் தனக்கு அதுதான் வீடு என்றார். 8 கோடி மக்கள் தன்னுடைய குடும்பத்தினர் எனவும் மேலும் தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக பாதுகாவலனாக மக்களுடன் நிற்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் எனவும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கு Standard Operating Procedure என்ற SOP வழங்கப்படுகிறது ஆனால் தனக்கு Stalin Sir Operatin Procedure ஆக உள்ளது என்று விஜய் கூறினார். மக்களை சந்திக்கவே அரசு அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டிய அவர், தன்னை நேசித்த தமிழக மக்களுக்காக நீதி கேட்டே அரசியலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார் மக்களிடம் நீதி கேட்காமல் யாரிடம் செறு நீதி கேட்பது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெகவின் தேர்தல் அறிக்கை விரைவில் என்றும் உங்களை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன், தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது அதில் அனைத்து அம்சங்களும் இடம்பெறும். பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது யார்? மக்கள் விரோத திமுக அரசை எதிர்ப்பதே முதன்மை. மக்கள் பலமுறை நிராகரித்தவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.
