Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.
    இந்தியா

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Editor web3By Editor web3February 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    immanuvel mekran india visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    4 நாட்கள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.  2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

    இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார். அதேபோல, இந்தியா ஏ.ஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 கண்காட்சியும் இன்று தொடங்குகிறது.

    இந்தநிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மும்பையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

    இவரது வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரான்ஸ் தற்போது இந்தியாவின் 2வது பெரிய பாதுகாப்பு சப்ளையராக உள்ளது. அதன்படி, அவரது இப்பயணத்தில் HAMMER ஏவுகணைகளின் திட்டத்தின்கீழ் 144 ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    Next Article ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.