Close Menu
    What's Hot

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!
    இந்தியா

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    Editor web3By Editor web3February 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bhupen Kumar Bora
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, நாட்டில் அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது.

    ஒருபுறம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடையே உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது, ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரசீன் சக்கரவர்த்தி தமிழக அரசை விமர்சித்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஒரு தரப்பினர் திமுக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் சைலண்ட்டாக பிரசீன் சக்கரவர்த்தி கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

    மற்றொரு புறம் தமிழகத்தை போன்று சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அசாமிலும் இதே பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது. அந்தவகையில் தற்போது அசாம் மாநில காங்கிரஸி மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான பூபேன் குமார் போரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மல்லிகார்ஜின கார்வுக்கும்  ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன .  இது தேசிய அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2021-25 வரை காங்கிரஸ் மாநிலத்தலைவராக இருந்த போரா, பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயின் அடாவடித்தனம் தான் தனது முடிவுக்குக் காரணம் என்று போரா குற்றம் சாட்டியதாக அறியப்படுகிறது. தனது கடிதத்தில், கட்சித் தலைமையால் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், மாநிலப் பிரிவில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் போரா கூறியுள்ளார். மாநிலத்தில் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து உயர் தலைமைக்கு தெரிவித்ததாகவும், அந்தச் சூழ்நிலை தனது சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இது தொடர்பாக போரா கூறுகையில், “இன்று காலை 8 மணிக்கு நான் என் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பி வைத்தேன். நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை விரிவாக விளக்கியுள்ளேன். இது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல. நான் 1994ஆம் ஆண்டு கட்சியில் இணைந்ததிலிருந்து 32 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளேன். இது வெறும் தனிப்பட்ட கோட்பாடு அல்ல; கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவாகும். அதனால்தான் எல்லாவற்றையும் விரிவாக காங்கிரஸ் உயர்மட்ட தலைமையிடம் தெரிவித்தேன்.”

    2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸின் தலைவராக போரா இருந்தார், கடந்த ஆண்டு அவருக்குப் பதிலாக கோகோய் நியமிக்கப்பட்டார். போரா அசாமில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். புதியதாக உருவாக்கப்பட்ட ரங்கனோடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், எம்.பி. ராக்கிபுல் உசேன் அணியில் சேர்க்கப்பட்டதனால் அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போரா வரும் நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் முறையாக சேர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற உயர்மட்ட சேர்க்கை, எதிர்க்கட்சி முகாமில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்களை இழுப்பதன் மூலம் தனது நிலையை மேலும் பலப்படுத்த வகையில் பாஜகவின் நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!
    Next Article ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?
    Editor web3
    • Website

    Related Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.