Close Menu
    What's Hot

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!
    தமிழ்நாடு

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    Editor web3By Editor web3February 17, 2026Updated:February 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thangam thennarasu speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில், இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன. கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.

    5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன.

    தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்றை தி.மு.க. அரசு பேராற்றலுடன் சமாளித்தது.

    காவிரி, வைகை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு பூங்காக்கள் அமைக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

    முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 6,374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

    புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுவரை 79.17 லட்சம் பேருக்கு செய்யப்பட்டசோதனையில் 1,929 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    36 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

    12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

    40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.

    திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!
    Next Article காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.