Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ – ‘விடியல் பயணம்’ – ‘தோழி விடுதிகள்’ – ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் – வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர். பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் ‘திராவிட மாடல் அரசு’ நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் – ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இப்பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

    இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”பரப்புரைக்கான சட்டமன்றத் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 20, 21 மற்றும் 22-ஆம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும்.

    இப்பயிற்சியை, சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சிக் கூட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையைத் தொடங்கிட வேண்டும்.

    தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான ஒன்றிய பா.ஜ.க. – அடிமை அ.தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து, ” நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமாக தருவேன்” என சூளுரைத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையினை முன்பணமாக ரூ.3000/-, கோடைக் கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000/- என மொத்தம் ரூ.5000/-த்தினை தமிழ்நாட்டு பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும்.

    வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் “வெல்லும் தமிழ்பெண்கள் – வீடு வீடாகப் பரப்புரை” தொடங்கி, உலக மகளிர் தினமான மார்ச்-8ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கழகத்தின் வெற்றியை உறுதி செய்து மீண்டும் தி.மு.கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என இப்பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும்.

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள் – பொறுப்பு அமைச்சர்கள் – மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!
    Next Article ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    April 21, 2026

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.