Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை!. அதிமுகவினர் ஒருவர் கூட பேரவைக்கு வரவில்லை!.
    தமிழ்நாடு

    இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை!. அதிமுகவினர் ஒருவர் கூட பேரவைக்கு வரவில்லை!.

    Editor web3By Editor web3February 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk assembly velinadappu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றத்திற்கு வராமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர்.

    தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 17ம் தேதி 2026 – 2027ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். விவாதத்தின் நிறைவு நாளான நேற்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அவருடைய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.  இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவாதத்தின்போது அவையில் இல்லை.

    இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கி வருகின்றனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு வராமல், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை.

    அதேபோல், ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதற்கு முன்பு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முதலமைச்சரின் பதிலுரையையும் அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!
    Next Article மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.