Close Menu
    What's Hot

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!
    தமிழ்நாடு

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    Editor web3By Editor web3February 21, 2026Updated:February 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    K.N. Nehru AIADMK releases
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக ரூ.1,020 கோடி ஊழல் புகாரை முன்வைத்து, அதிமுக தரப்பு முக்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு டெண்டர்களில் (Tenders) மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. குறிப்பாக, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 7.5% முதல் 10% வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், அந்தத் தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அளித்த 258 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இந்த முறைகேடு தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க நேற்று (பிப்ரவரி 20, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களில் வாட்ஸ்அப் உரையாடல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள் மற்றும் டெண்டர் முறைகேடுகளுக்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அதேசமயம், தன் மீதான புகார்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், இதனைச் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்திருந்தார்.

    https://x.com/AIADMKOfficial/status/2025079283576676777?

    இந்தநிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில், 51 வது பக்கத்தில் டெண்டர்களுக்கான 7.5% – 10% வரையிலான கமிஷன் (Party Fund) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.

    மேலும் அந்த பதிவில் தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!

    “தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?

    செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!

    நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!

    இன்னும் இரண்டே மாதங்கள் தான்… அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி! என்று பதிவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
    Next Article டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.
    Editor web3
    • Website

    Related Posts

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    புதுச்சேரியில் பாஜக – காங்கிரஸ் மோதல்!. பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு!. பெரும் பதற்றம்!

    தவெக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்!. செங்கோட்டையனுக்கு இன்ப அதிர்ச்சி!. விஜய் அறிவிப்பு!

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    ஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026

    2026 சட்டமன்றத் தேர்தல்!. தொகுதிப்பங்கீடு குழு அமைத்தது திமுக!.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.