Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!
    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    Editor web3By Editor web3February 23, 2026Updated:February 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    final voter list tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு ( SIR) இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பட்டியல் வழங்கப்பட்டது.

    மொத்த வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.44 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கம்: போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் நோக்கில், சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

    புதிய வாக்காளர்கள்: 18 வயது பூர்த்தியடைந்த சுமார் 66 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்தத் திருத்தப் பணியின் போது தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.

    பெண் வாக்காளர்கள்: சுமார் 2.77 கோடி.

    ஆண் வாக்காளர்கள்: சுமார் 2.66 கோடி.

    மூன்றாம் பாலினத்தவர்: சுமார் 8,500-க்கும் மேற்பட்டோர்.

    கடந்த காலங்களில் இருந்த 6.41 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 5.44 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இறப்பு, குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒரே நபர் இரு இடங்களில் பதிவாகி இருப்பது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வரும் 2026 தேர்தலில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்ய உதவும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மீண்டும் ‘சோழிங்கநல்லூர்’ முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை மாவட்ட வாக்காளர் புள்ளிவிவரங்கள்: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 தொகுதிகளில் இறுதி வாக்காளர் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

    மொத்த வாக்காளர்கள்: சென்னையில் 28,30, 936 வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர். 

    ராதாகிருஷ்ணன் நகரில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 856 வாக்காளர் உள்ளனர்.

    பெரம்பூர் – 2,22,792,

    கொளத்தூர் – 2,07,251

    வில்லிவாக்கம் – 1,59,764

    திரு வி க நகர் – 1,78,793

    ⁠எழும்பூர் – 1,34,879

    ⁠ராயபுரம் – 1,56,931

    ⁠துறைமுகம் 1,16,896

    சேப்பாக்கம் – 1, 63,866

    ⁠ஆயிரம் விளக்கு – 1,53,908

    அண்ணா நகர் – 1,81,402

    விருகம்பாக்கம் – 1,96,536

    ⁠சைதாப்பேட்டை – 2,00,607

    ⁠தி நகர் – 1,54,943

    ⁠மயிலாப்பூர் – 1,94,731

    வேளச்சேரி 2,11,691

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.
    Next Article 8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.