Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.
    தமிழ்நாடு

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    Editor web3By Editor web3February 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil Nadu voters final
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் புதிய பட்டியலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆக உள்ளது.

    இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் போது, உயிரிழந்தவர்கள், ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பது மற்றும் குடிபெயர்ந்தவர்கள் எனச் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்டவர்கள் எனச் சுமார் 27.53 லட்சம் பேர் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆண்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மீண்டும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலினத்தவரும் இருப்பதாகவும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ஒரு துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 பேர் இருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைத்தளமான https://elections.tn.gov.in பக்கத்தில் பார்க்கலாம் எனவும், 1.1.2026 அன்று 18வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் எனவும் அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 
    Next Article என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    February 23, 2026

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா?. விஜய் அட்டாக்!.

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.