Close Menu
    What's Hot

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»போர் பதற்றம்!. தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    போர் பதற்றம்!. தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    Editor web3By Editor web3March 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    war tamil nadu govt helpline num
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், வளைகுடாவாழ் தமிழர்களுக்கான உதவி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்-இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24×7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.

    தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp) அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்: இந்தியாவிற்குள் – 1800 309 3793 வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு – +91 80 6900 9901 என உதவி எண்களை பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉண்மையான ஆன்மீகவாதிகளுக்கு திராவிட மாடல் அரசை விரும்புவர்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…
    Next Article சூழ்ச்சிகளை அறிவால் முறியடிக்க வேண்டும்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி!
    Editor web3
    • Website

    Related Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    July 4, 2026

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    July 4, 2026

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.