Close Menu
    What's Hot

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா மையமாக உருவெடுக்கிறது!. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
    இந்தியா

    புதுச்சேரி இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா மையமாக உருவெடுக்கிறது!. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

    Editor web3By Editor web3March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puthuchery pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி மாநிலம் தென்னிந்தியாவின் மிக முக்கியமான ‘மருத்துவச் சுற்றுலா மையமாக’  மாறி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) போன்ற உயர்தர மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன தனியார் மருத்துவமனைகள், அண்டை மாநில மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்த்து வருகின்றன.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதால், புதுச்சேரி மருத்துவச் சுற்றுலாவில் முன்னிலை வகிக்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத்’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சாமானிய மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவச் சுற்றுலாவின் வளர்ச்சியால் புதுச்சேரியின் உள்ளூர் பொருளாதாரம், ஹோட்டல் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

    புதுச்சேரியை ஒரு ‘அறிவுசார் மையமாகவும், ‘ஆன்மீக மையமாகவும்’ மாற்றுவதோடு, தற்போது மருத்துவத் துறையிலும் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டை முன்னேற்றும் தலைவர்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின கட்டுரை..!
    Next Article ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் பதவி?. திமுகவின் மெகா பிளான்!.
    Editor web3
    • Website

    Related Posts

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    March 17, 2026

    41 உயிர்கள்… 30 கேள்விகள்!. சிபிஐ வளையத்தில் செந்தில் பாலாஜி!. சொல்லப்போகும் பதில் என்ன?

    March 17, 2026

    புதுச்சேரி NDA கூட்டணியில் விரிசல்?. லட்சிய ஜனநாயக கட்சியால் வந்த வினை!. ரங்கசாமி எடுத்த அதிரடி முடிவு?

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    ஒரு நாளைக்கு ரூ.15 கோடி… 4 வருடத்திற்கு ரூ.24,000 கோடி!. திமுகவின் டாஸ்மாக் ஊழலால் இபிஎஸ் கொந்தளிப்பு!

    Trending Posts

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    March 17, 2026

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026

    5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.

    March 17, 2026

    எனக்கு நயன்தாரா வேணும்; இதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்!. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!. 

    March 17, 2026

    திமுக வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை; பச்சைப் பொய் சொல்கிறார்கள்!. இபிஎஸ் தாக்கு!.

    March 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.