கூட்டணி விவகாரத்தில் திமுக எதுவும் கெடு விதிக்கவில்லை என்றும் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இன்று (மார்ச் 3) காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் சித்தரஞ்சன்சாலை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இதன்பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம், ஸ்டாலின் – ப.சிதம்பரம் இருவரும் என்ன பேசினர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நல்லப்படியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்தது. கூட்டணி விவகாரத்தில் திமுக எதுவும் கெடு விதிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இழுபறி எதுவும் இல்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்று பதிலளித்தார்.
