Close Menu
    What's Hot

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொகுதி பங்கீடு மோதலுக்கு முற்றுப்புள்ளி!. காங்கிரஸுக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் ஆஃபர்
    தமிழ்நாடு

    தொகுதி பங்கீடு மோதலுக்கு முற்றுப்புள்ளி!. காங்கிரஸுக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் ஆஃபர்

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin chidambaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடந்த சில நாட்களாகக் கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸிடம், திமுக தரப்புக் குழுவினர் அதிகபட்சமாக 25 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கறாராகத் தெரிவித்துவிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மேலிடம், கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்தும் ஆலோசித்து வந்தது. இந்தச் சூழலில்தான், இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலைச் சரிசெய்யும் வகையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின் பேரில், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழலையும், மதச்சார்பற்ற கூட்டணியின் அவசியத்தையும் ப.சிதம்பரம் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஒரு படி இறங்கி வந்து காங்கிரஸிற்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, காங்கிரஸிற்கு 29 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் (29+1) வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

    இந்த திடீர் சமரசத் திட்டத்தினால் கூட்டணியில் நிலவி வந்த முட்டுக்கட்டை கிட்டத்தட்ட நீங்கியுள்ளது. முன்னதாக 25 இடங்களுக்கு மேல் வழங்கவே முடியாது என்ற பிடிவாதத்தில் இருந்த திமுக, தற்போது ப.சிதம்பரத்தின் குறுக்கீட்டிற்குப் பிறகு நான்கு கூடுதல் இடங்களை வழங்கச் சம்மதித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று மாலை அல்லது நாளை காலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி-லண்டன் செல்ல ரூ. 9 லட்சம்? போர் பதற்றத்தால் எகிறிய விமான கட்டணம்!. பயணிகள் ஷாக்!
    Next Article  “திமுக கெடு எதுவும் விதிக்கவில்லை; கூட்டணி உறுதியாக உள்ளது”!. செல்வப் பெருந்தகை பேட்டி!
    Editor web3
    • Website

    Related Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    May 19, 2026

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.