Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது!. விஜய் பரபர பேச்சு!
    தமிழ்நாடு

    கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது!. விஜய் பரபர பேச்சு!

    Editor web3By Editor web3March 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thanjai vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக தலைவா் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த நிலையில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு வந்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பேசியவர்,

    “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். வரப்போகும் தேர்தலில் விசில் போடப்போவது நம்ம தவெகதான். தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக.

    எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.

    வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஐநா சபை தண்ணீர் திவால் என்று கட்டுரை வந்தது. நிலத்தடி நீரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை நடந்தால் நிலத்தடி நீர் எப்படி கிடைக்கும். மணல் மாஃபியா கும்பல் யார் திமுக தான். மொத்தத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது.

    மழையில் நனைந்து நெல் சேதமான போது டெல்டாகாரன் என கூறிய நீங்கள் என்ன செய்தீர்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை செய்ய வேண்டியது தானே. நமது ஆட்சி அடைந்தவுடன் உடனடியாக பெரிய திட்டங்களை நிறைவேற்றுவோம். அமைதியாக இருந்தால் எதுவுமே தெரியாமல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடுவிஸ்ட்!. காங்கிரஸுக்கு 29 + 2 சீட் கன்பார்ம்?. இன்று முடிவாகுமா?. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்! 
    Next Article கரூர் டூ ஜனநாயகன் விவகாரம்!. தன்மீது பழி மேல் பழி!. பூசி மெழுகி குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி!. விஜய்! 
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.