Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து; 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி!. வாக்குறுதி கொடுத்த விஜய்!
    தமிழ்நாடு

    கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து; 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி!. வாக்குறுதி கொடுத்த விஜய்!

    Editor web3By Editor web3March 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thanjai vijay speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய விஜய்,

    முதல்வரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிகாரங்க தூங்க விடுவதில்லை. தற்போது விஜய்யும் மக்கள் சக்தியுடன் வந்து தூங்க விடுவதில்லை. மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறார். ரூ.1000-க்கு பதிலாக ரூ. 5,000 கொடுத்தால் அதையும் கேள்வி கேட்கிறார்கள். விசில் சப்தம் வேற விண்ணை எட்டுகிறது. கூட்டணி கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியவில்லை. இந்த விஜய்யை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற விஜய்யை முடக்க முடியாது.

    உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க நினைத்தபோது, மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு அர்த்தம் ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு செய்யாதீங்க என்பது தான். மக்கள் பிரச்னைக்கு நிதியில்லை, இதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது. மக்கள் பிரச்னையை முதலில் பாருங்கள். சிலையை எல்லாம் பிறகு பார்க்கலாம். சிலிண்டருக்கு ரூ.100 மானியம், நீட்டை ஒழிப்போம் என்பதெல்லாம் என்ன ஆனது. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி இது. மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது என்றார்.

    தொடர்ந்து 2-ம் கட்ட வாக்குறுதிகளாக அவர் அறிவித்தது, நம் ஆட்சி அமைந்ததும் டெல்டா விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வோம். 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும் 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடனை 50% வரை ரத்து செய்வது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

    திமுக போல பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் வெளிப்படையாகச் சொல்வோம். 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும். விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களும் கொண்டுவரப்படாது, மத்திய அரசின் அழுத்தம் இருந்தாலும் தவெக அதனை முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக நிற்கும்.

    கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை நம்முடைய அரசு பார்த்துக்கொண்டு இருக்காது. போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ நெல்மூட்டைகள் ஏற்றி இறக்குவதற்கோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். கமிஷன் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

    மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு தவெக உண்மையான அழுத்தம் கொடுக்கும். கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர் சாலை பேருந்து வசதி என அடிப்படை விஷயங்களுக்கு நம் அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.

    பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கு நம் அரசு முக்கியத்துவம் கொடுக்கும். அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி தனியார் வேலைவாய்ப்புகளுக்கான உத்தரவாதமும் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் டூ ஜனநாயகன் விவகாரம்!. தன்மீது பழி மேல் பழி!. பூசி மெழுகி குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி!. விஜய்! 
    Next Article கருணாநிதியால் கூட இதை செய்யமுடியவில்லை!. மோசடியில் திமுக ஆட்சிதான் முன்மாதிரி!. விஜய் விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.