Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாநிலங்களவை தேர்தல்!. பாமகவிற்கு ஒரு சீட்!. அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு!
    தமிழ்நாடு

    மாநிலங்களவை தேர்தல்!. பாமகவிற்கு ஒரு சீட்!. அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு!

    Editor web3By Editor web3March 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani thambidurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது.

    தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.  சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படியில்  திமுக   4  உறுப்பினர்களையும் அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும். மேலும்  மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

    இந்த நிலையில் அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல், அதிமுக சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு தலா ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக தனது 2 இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று  அறிவித்து. அதன் படி திமுக தரப்பில் இருந்து திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28+1 சீட்!. தொகுதி பங்கீடு கையெழுத்து!.
    Next Article “அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.