Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திருமண விழாவில் விஜய்- திரிஷா ஜோடி! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?
    அரசியல்

    திருமண விழாவில் விஜய்- திரிஷா ஜோடி! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

    Editor TN TalksBy Editor TN TalksMarch 5, 2026Updated:March 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 03 05 at 9.29.25 PM1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் வந்து கலந்து கொண்டது, அண்மையில் வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று அமைந்துள்ளது.

    விஜய்​யிட​ம் இருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்​கீதா செங்கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனுத்தாக்​கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்​தர​விட்​டது.

    தனக்​கும், தனது கணவர் விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10ல் இங்​கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்​ததாக மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். அதன்​பிறகு தங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆக. 25ல் சென்னை ராஜா முத்​தையா மன்​றத்​தில் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார். தங்​களுக்கு ஜேசன் சஞ்​சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா (20) என்ற மகள் உள்ளதாக மனுவில் அவர் கூறி இருந்தார்.

    தனது கணவர் விஜய்க்கும், நடிகை ஒருவருக்​கும் திரு​மணத்தை மீறிய தொடர்பு இருந்​தது கடந்த 2021 ஏப்​ரல் மாதம் தனக்கு தெரிய​வந்​ததாக சங்கீதா தெரிவித்திருந்தார். இதனால் மனதள​வில் பாதிக்கப்பட்டதுடன், உறவுகள் மற்றும் சமூகத்தில் தானும், தனது குழந்தைகளும் பாதிக்கப்பட்டதாக அவர்  குறிப்பிட்டிருந்தார். நடிகை உடனான உறவைத் துண்​டித்து விடு​வ​தாக விஜய் கூறிய போதும், அதன்​படி அவர் நடந்துகொள்​ள​வில்​லை என சங்கீதா தெரிவித்திருந்தார். சுமூக​மாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர எடுத்த முயற்​சிகள் எது​வும் பலனளிக்கவில்லை என அவர் கூறி இருந்தார். தேவைபட்டால், நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

    மனைவி என்ற முறை​யில் தனக்​கும், குடும்​பத்​துக்​கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவி​களை​யும் கணவர் விஜய் நிறுத்திவிட்டதாகவும் மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். தற்​போது தங்களுக்​குள் எந்த உறவும் இல்​லை என்பதால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்​டும் என்று மனு​வில் சங்​கீதா கூறி​யிருந்​தார். இந்​த வழக்​கு ஏப்​ரல் 20ம் தேதி வி​சா​ரணைக்​கு வர உள்​ளது.

    இந்தநிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க விஜய்யும், திரிஷாவும் ஒரே நிற உடையில் ஒரே காரில் வந்திறங்கியது, சங்கீதாவின் புகார் மற்றும் தங்களைச் சுற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் நடந்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல்லை தாண்டி ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்!. அஜர்பைஜான் கடும் எச்சரிக்கை!
    Next Article தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்!. புதிய ஆளுநர் யார்?
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.