Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மேற்காசிய போர்!. இந்தியாவில் விலைவாசி உயருமா?. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!.
    இந்தியா

    மேற்காசிய போர்!. இந்தியாவில் விலைவாசி உயருமா?. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!.

    Editor web3By Editor web3March 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nirmala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வில் மக்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜியா.உர். ரகுமான், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் விலைவாசி உயருமா ? என்று கேள்வி எழுப்பினார்.

    பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”கடந்த ஓராண்டாகக் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை, பிப்ரவரி 28, 2026 அன்று மேற்கு ஆசியாவில் தொடங்கிய போர் காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $69.01 ஆக இருந்தது. ஆனால் மார்ச் 2-ம் தேதி: இது $80.16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போதைய பணவீக்கம் மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த விலை உயர்வு இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் “ரிசர்வ் வங்கியின் அக்டோபர் 2025 அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்தால், அது பணவீக்கத்தில் 0.30% அளவுக்கே மாற்றத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக அமைச்சர் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்தார்.

    அதன்படி சில்லறை ”பணவீக்கமானது  2023 -25 ம் ஆண்டில் : 5.4%, 2024 -25ம் ஆண்டில் : 4.6%, 2025 – 26 (ஏப்ரல்-ஜனவரி): 1.8% ஆகும்” என்றார். மேலும் அவர் “ஜனவரி 2026-ல் பணவீக்கம் 2.75% என்ற அளவிலேயே உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கிற்கு உள்ளாகவே (4% ± 2%) உள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 2025 முதல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) வட்டி விகிதத்தை 1.25% குறைத்துள்ளது.

    அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை அதிகரித்தல், சந்தையில் தானியங்களை விற்பனை செய்தல் மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் போது ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்தல். மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ‘பாரத்’ பிராண்ட் பெயரில் சில்லறை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் – அமித்ஷா சந்திப்பு..? என்.டி.ஏ-வில் இணையும் தவெக..!
    Next Article பிரதமர் மோடி வருகை; தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவு?. EPS-ஐ சந்திக்கும் பியூஷ் கோயல்!
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.