Close Menu
    What's Hot

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்திலேயே விசாரணை நடத்துங்கள்!. சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை!.
    தமிழ்நாடு

    தமிழகத்திலேயே விசாரணை நடத்துங்கள்!. சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை!.

    Editor web3By Editor web3March 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, தமிழகத்திலேயே ஆஜராக அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இது குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (மார்ச் 15) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேராகவே இந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூர் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்யை காண கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.   இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவிரன்பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தவகையில், தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜயிடம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி, 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி, 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கரூர் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி (ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். டெல்லிக்கு அடிக்கடி பயணம் செய்வது கட்சிப் பணிகளைப் பாதிப்பதோடு, தேவையற்ற பயண நேரத்தையும் செலவிடுகிறது.

    இந்தநிலையில், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் அல்லது தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலாவது விசாரணை நடத்தினால், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.
    Next Article கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.