Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!
    தமிழ்நாடு

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    Editor web3By Editor web3March 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Acid wife
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பல்லாவரம் அடுத்த பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29). இவரும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020 ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த சூழலில் முகமது அலி மது குடித்துவிட்டு தினம் தோறும் அவரது மனைவி ஷானா பாத்திமாவிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானா பாத்திமா கணவனைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    கடந்த ஏழு மாதங்களாக தனியாக வாழ்ந்து வரும் ஷானா பாத்திமா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முகமது அலி அவரது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

    இதற்கிடையில் கடந்த 15ஆம் தேதி ஷானா பாத்திமாவின் பெற்றோர்கள் காதணி விழாவிற்காக மதுரை சென்று உள்ளனர். தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஷானா பாத்திமா பணிக்கு செல்லும் போது வீட்டை பூட்டுவதற்கு பூட்டு இல்லாததால் அருகிலுள்ள கடைக்கு சென்று பூட்டு ஒன்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார்.

    அப்போது பாத்திமா செல்வதைப் பார்த்த அவரது கணவர் முகமது அலி அவரை வழிமறித்துள்ளார். திடீரென அவரது முகத்தில் கழிவறை கழுவும் ஆசிட்டை வீசியுள்ளார். இதனால் வலியில் துடித்த ஷானா பாத்திமா அங்கிருந்து அழுது கொண்டு  ஓடினார். முகமது அலியும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் ஷானா பாத்திமாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிட் பட்டதால் அவருக்கு இடது கண்ணில் பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஷானா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் முகமது அலியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 மாநில சட்டமன்றத் தேர்தல்!. 1,111 பார்வையாளர்கள் நியமனம்!. தேர்தல் ஆணையம் அதிரடி!.
    Next Article நம்பர் 8-க்கு மாறிய தோனி!. வைரலாகும் பதிவு!. குழப்பத்தில் ரசிகர்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.