Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விளாத்திகுளம் மாணவியை கொன்றவன் கைது! குற்றவாளி பிடிபட்டது எப்படி?
    தமிழ்நாடு

    விளாத்திகுளம் மாணவியை கொன்றவன் கைது! குற்றவாளி பிடிபட்டது எப்படி?

    Editor web3By Editor web3March 19, 2026Updated:March 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vilaththikulam rape case arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விளாத்திகுளத்தில் ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்மந்தந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துள்ளது காவல்துறை. இதில் குற்றவாளி பிடிபட்டது எப்படி?

    தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளத்தில் சில தினங்களுக்கு முன் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். காலை இயற்கை உபாதைக்காக சென்ற அவருக்கு இக்கொடுமை நடந்தது. முதலில் வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததை அடுத்து பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர். இருந்தும் மாணவி கிடைக்காததையடுத்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். அப்போது காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதால் மாணவியை தேடும் பணி விரைவாக தொடங்கப்படவில்லை. அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் தாமதமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப்பரிசோதனை முடிந்த பின்னரும் மாணவியின் உடலை வாங்காமல், குற்றவாளியை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என பெற்றோரும் உறவினரும் சுமார் 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது சம்மந்தப்பட்ட குற்றவாளியை தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றவாளி பிடிபட்டது எப்படி? என்ற தகவலின் படி, விசாரணையில் பார்த்திபனுரை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிய குற்றவாளி அந்த பைக்கில் விளாத்திகுளம் வந்ததாக தெரிய வந்துள்ளது. பார்த்திபனூரில் பைக்கை திருடிய அந்த நபர், ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளனர். மாணவியின் நகத்தில் இருந்த தசை துணுக்கை வைத்து மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் தர்மமுனீஸ்வரன் தான் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று, மாணவி தனியாக காட்டுக்குள் செல்வதை பார்த்து பின்தொடர்ந்து சென்ற தர்மமுனீஸ்வரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளான்.

    மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு வந்து சென்ற பைக்கின் பதிவு எண்ணை கொண்டும், விளாத்திகுளம் காட்டுக்குள் உள்ள காற்றாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் தர்மமுனீஸ்வரன் தப்பி செல்வது போல் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, இந்த தர்மமுனீஸ்வரன் கடந்த 2020 ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன். அந்த வழக்கில் பிணையில் இருக்கும் இந்த வேலையில் இக்குற்றத்தை நிகழ்த்தியுள்ளான் என்பது தெரிய வருகிறது. தற்போது ஒரு வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்த தர்மமுனீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குற்றவாளியை கைது செய்ததை தொடர்ந்து, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாணவியின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிணையில் உள்ள ஒரு பாலியல் குற்றவாளி மீண்டும் அதேபோன்ற பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு மாணவியை கொலை செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றவாளிகளை காவல்துறையும் சட்டமும் சிறையில் வைக்காமல் வெளியில் நடமாட விடுவது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article900 கோல்!. வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!. ரொனால்டோ சாதனையை முறியடித்து அசத்தல்!.
    Next Article கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?
    Editor web3
    • Website

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.