Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சோசியல் மீடியாவில் அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    சோசியல் மீடியாவில் அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3March 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Social Media election commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், போலிச் செய்திகள் மற்றும் முறையற்ற விளம்பரங்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளின் விவரங்களை வேட்புமனுத் தாக்கலின் போதே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேட்பாளர்களின் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மற்றும் அதற்காகச் செய்யப்படும் செலவினங்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதிச் சான்று இல்லாமல் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களையும் பதிவிடக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    முறையான சான்றளிப்பு இன்றி இணையதளங்கள் அல்லது வேட்பாளர்களின் சொந்த பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டால், அவை தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த விளம்பரங்களுக்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபயங்கரவாத பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!. ஜிடிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்!
    Next Article சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.