Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.
    இந்தியா

    துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.

    Editor web3By Editor web3March 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Officer Suicide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஞ்சாப் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரில், அம்மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அமிர்தசரஸ் மாவட்டத்தின் பஞ்சாப் மாநிலக் கிடங்கு கழக மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ககன்தீப் சிங். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன் அவர் வெளியிட்ட 12 வினாடி வீடியோவில், “எனது சாவிற்கு அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தான் காரணம், அவர் மீதான பயத்தாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருந்தார். கிடங்கு கட்டுமான ஒப்பந்தங்களை அமைச்சரின் தந்தைக்குச் சாதகமாக ஒதுக்கும்படி ககன்தீப் சிங் வற்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த மார்ச் 13-ம் தேதி ககன்தீப் சிங் அமைச்சரின் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி, “நான் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினேன்” என்று கட்டாயப்படுத்தி வாக்குமூலம் அளிக்க வைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவை வைத்து அமைச்சரின் தரப்பு அவரை பிளாக்மெயில் செய்ததாகவும் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

    சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பகவந்த் மான் அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக பெற்றார். அமைச்சரின் பதவி விசாரணைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், லால்ஜித் சிங் புல்லர், அவரது தந்தை மற்றும் உதவியாளர் ஆகிய மூவர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 108 BNS) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஊழலற்ற ஆட்சி” என்று முழங்கும் ஆம் ஆத்மி அரசுக்கு, இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய கறையாகப் பார்க்கப்படுகிறது.

    .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!
    Next Article ஐபிஎல் திருவிழா!. இந்த முறை 6-வது கோப்பை உங்களுக்காக!. MI ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உறுதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    June 9, 2026

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.