Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விவசாயக் கடன் தள்ளுபடி!. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்!
    தமிழ்நாடு

    விவசாயக் கடன் தள்ளுபடி!. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்!

    Editor web3By Editor web3March 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தேர்தலுக்கான வாக்குறுதிகளை ராமதாஸ் வெளிட்டுள்ளார். அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனால் ராமதாஸ் தரப்பு, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து களம் காணுமா என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.

    இந்த சூழலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சசிகலாவால் புதிதாக தொடங்கப்பட்ட அஇபுதமமுக-உடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார்.

    இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அந்த அறிக்கையில் மருத்துவம், வேளாண்மை, நீதித்துறை, காவல்துறை, நீர்வளம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 75 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில், பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், அரசியல் பிரிவு தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் ”ஒவ்வொரு தனி மனித வளர்ச்சியும், ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும் நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.

    தமிழக மக்களுக்காக நான் பாடுபடுகிறேன். என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இதேப்போல் எங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாக அமையும்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகால அவகாசம் நிறைவு!. வாபஸ் பெறாத வேட்பாளர்கள்!. 5 தொகுதிகளில் காங். – திமுக நேரடி மோதல்!
    Next Article பரபரப்பு!. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.