Close Menu
    What's Hot

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»127 தொகுதிகளுக்கான அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!. இபிஎஸ் அதிரடி!
    தமிழ்நாடு

    127 தொகுதிகளுக்கான அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!. இபிஎஸ் அதிரடி!

    Editor web3By Editor web3March 27, 2026Updated:March 27, 2026No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    AIADMK PARTY OFFICE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அதிமுக தனது தேர்தல் களப்பணியை மிகத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியத் தொகுதிகளுக்குப் பலமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி தொகுதிக்கு மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், போடிநாயக்கனூர் தொகுதிக்குக் கழகக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வி.டி. நாராயணசாமி, மற்றும் கம்பம் தொகுதிக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், பெரியகுளம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார். இவர் அமமுக கழக அமைப்புச் செயலாளர் ஆவார். இந்த அறிவிப்புகள் அந்தந்தப் பகுதி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 3ஆம் கட்டமாக வெளியாகும் என தெரிகிறது.

    2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

    கும்மிடிப்பூண்டி- சுதாகர்

    திருத்தணி- கோ.ஹரி

    பொன்னேரி (தனி)- சிறுணியம் பலராமன் (முன்னாள் எம்.எல்.ஏ.)

    திருவள்ளூர்- பி.வி.ரமணா

    மாதவரம்- மூர்த்தி (முன்னாள் அமைச்சர்)

    திருவொற்றியூர்- கே.குப்பன் (முன்னாள் எம்.எல்.ஏ.)

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.பழனி (முன்னாள் எம்.எல்.ஏ.)

    தாம்பரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன் (முன்னாள் எம்.பி.)

    செங்கல்பட்டு- கஜா என்கிற கஜேந்திரன்

    செய்யூர் (தனி)- ராஜசேகர்

    மதுராந்தகம் (தனி)- மரகதம் குமரவேல்

    காஞ்சிபுரம்- சோமசுந்தரம்

    அரக்கோணம் (தனி)- சு.ரவி

    காட்பாடி- ராமு

    ஆற்காடு– எஸ்.எம். சுகுமார்

    வேலூர்- எஸ்ஆர்கே அப்பு

    அணைக்கட்டு – வேலழகன்

    குடியாத்தம் (தனி)- பரிதா புருஷோத்தமன்

    வாணியம்பாடி – செந்தில்குமார்

    ஆம்பூர்- ஆர்.வெங்கடேசன்

    ஊத்தங்கரை (தனி)- டி.எம்.தமிழ்ச்செல்வம்

    பர்கூர்- இ.சி. கோவிந்தராசன்

    கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார்

    ஓசூர்- பி.பாலகிருஷ்ண ரெட்டி

    பாப்பிரெட்டிபட்டி- மரகதம் வெற்றிவேல்

    அரூர் (தனி)- சம்பத்குமார்

    செங்கம் (தனி)- டி.எஸ்.வேலு

    கீழ்பென்னாத்தூர் – எஸ்.ராமசந்திரன்

    ஆரணி- எல்.ஜெயசுதா

    செய்யார்- முக்கூர் சுப்பிரமணியன்

    வந்தவாசி (தனி)- ராணி

    திண்டிவனம்(தனி)- அர்ஜுனன்

    வானூர் (தனி)- பி.முருகன்

    விழுப்புரம் – விஜயா

    திருக்கோவிலூர்- எஸ்.பழனிசாமி

    உளுந்தூர்பேட்டை – குமரகுரு

    சங்கராபுரம்- ராகேஷ்

    கள்ளக்குறிச்சி (தனி)- ராஜீவ் காந்தி

    கங்கவல்லி (தனி)- நல்லதம்பி

    ஆத்தூர் (தனி)- ஜெயசங்கரன்

    ஏற்காடு (எஸ்டி)- உஷாராணி

    ஓமலூர் – ஆர்.மணி

    மேட்டூர்- ஜி. வெங்கடாசலம்

    சங்ககிரி- வெற்றிவேல்

    சேலம் (தெற்கு)- வினோத்

    வீரபாண்டி- டாக்டர் பாலாஜிசுகுமார்

    சேந்தமங்லம் (எஸ்டி)- சந்திரசேகரன்

    நாமக்கல் – ஸ்ரீதேவி

    பரமத்தி வேலூர்- எஸ். சேகர்

    திருச்செங்கோடு – ஆர்.சந்திரசேகர்

    ஈரோடு கிழக்கு- ஆர்.மனோகரன்

    தாராபுரம் (தனி)- சத்தியபாமா

    காங்கேயம் – என்எஸ்என் நடராஜ்

    பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்

    அந்தியூர்- ஹரிபாஸ்கர்

    கோபிசெட்டிபாளையம்- வி.பி.பிரபு

    பவானிசாகர் (தனி)- பண்ணாரி

    கூடலூர் (தனி)- பொன்.ஜெயசீலன்

    குன்னூர் – ராமு

    மேட்டுப்பாளையம்- ஓ.கே.சின்னராஜ்

    திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம்.ஆனந்தன்

    பல்லடம்- பல்லடம் பரமசிவம்

    சூலூர்- வி.பி.கந்தசாமி

    கவுண்டம்பாளையம்- பிஆர்ஜி அருண்குமார்

    கோயமுத்தூர் தெற்கு – அம்மன் அர்ச்சுணன்

    சிங்காநல்லூர்- கே.ஆர். ஜெயராம்

    கிணத்துக்கடவு- செ.தாமோதரன்

    பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்

    வால்பாறை (தனி)- லட்சுமண சிங்

    உடுமலைப்பேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்

    பழனி- ரவி மனோகரன்

    ஆத்தூர்- விஸ்வநாதன்

    நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி

    வேடசந்தூர்- வி.பி.பி.பரமசிவம்

    அரவக்குறிச்சி – கே.செல்வக்குமார்

    கிருஷ்ணராயபுரம் (தனி)- டாக்டர் எஸ் திவ்யா

    குளித்தலை – எஸ்.கருணாகரன்

    மணப்பாறை- பி.எல்.விஜயகுமார்

    ஸ்ரீரங்கம்- ஆர்.மனோகரன்

    திருச்சி (கிழக்கு)- ராஜசேகரன்

    திருவெறும்பூர் – ப.குமார்

    லால்குடி- லீமா ரோஸ்

    முசிறி- யோகநாதன்

    துறையூர் (தனி)- இ. சரோஜா

    பெரம்பலூர் (தனி)- இளம்பை ரா.தமிழ்ச்செல்வன்

    நெய்வேலி- சொரத்தூர் ராஜேந்திரன்

    பண்ருட்டி- கே.மோகன்

    கடலூர்- எம்.சி.சம்பத்

    குறிஞ்சிப்பாடி- புவனேந்திரன்

    புவனகிரி – அருண்மொழிதேவன்

    சிதம்பரம்- கே.ஏ.பாண்டியன்

    சீர்காழி (தனி)- ம.சக்தி

    பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ்

    நாகப்பட்டினம்- தங்க.கதிரவன்

    திருத்துறைப்பூண்டி (தனி)- பாலதண்டாயுதம்

    திருவிடைமருதூர் (தனி)- இளமதி சுப்பிரமணியன்

    பாபநாசம்- சண்முகபிரபு

    ஒரத்தநாடு- எம்.சேகர்

    பட்டுக்கோட்டை- சி.வி.சேகர்

    பேராவூரணி- கோவி.இளங்கோ

    திருமயம்- பி.கே.வைரமுத்து

    சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்

    மேலூர்- பெரியபுள்ளான் (எ) செல்வம்

    மதுரை கிழக்கு- மாங்குளம் மகேந்திரன்

    சோழவந்தான் (தனி)- கி.மாணிக்கம்

    மதுரை வடக்கு- டாக்டர் பி.சரவணன்

    உசிலம்பட்டி- ஐ.மகேந்திரன்

    ஆண்டிப்பட்டி- லோகிராஜன்

    போடிநாயக்கனூர் – வி.டி.நாராயணசாமி

    கம்பம் – ஜக்கையன்

    ஸ்ரீவில்லிபுத்தூர்- சந்திரபிரபா

    விருதுநகர் – வி.ஜி.கணேசன்

    அருப்புக்கோட்டை- சேதுபதி

    பரமக்குடி (தனி)- எஸ்.முத்தையா

    திருவாடானை- கீர்த்திகா முனியசாமி

    முதுகுளத்தூர் – மலேசியா பாண்டி

    விளாத்திக்குளம் – சத்யா

    தூத்துக்குடி – சி.த.செல்லப்பாண்டியன்

    ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி.சண்முகநாதன்

    சங்கரன்கோவில் (தனி)- திலிபன் ஜெய்சங்கர்

    கடையநல்லூர்- கிருஷ்ணமுரளி

    தென்காசி- செல்வமோகன்தாஸ்

    ஆலங்குளம்- கே.ஆர்.பி. பிரபாகரன்

    திருநெல்வேலி- தச்சை கணேசராஜா

    அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா

    பாளையங்கோட்டை- சையது சுல்தான் சம்சுதீன்

    கன்னியாகுமரி- தளவாய்சுந்தரம்

    கோபி தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால் அவருக்கு பதில் அவரது அண்ணன் மகன் கே.கே.செல்வனுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதிமுகவில் சேர்ந்ததும் தனது சித்தப்பாவை எதிர்த்து போட்டியிட தயார் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    அது போல் கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமாரோஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியில் இருந்து விலகி பிப்.17ம் தேதி அதிமுக சேர்ந்தார் லீமா ரோஸ். இவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி ஆவார். மேலும் ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில் போடி தொகுதிக்கு வி.டி.நாராயணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்த தேர்தலுக்காக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் அதிமுக எம்.எல்.ஏ . அம்மன் அர்ஜுனனும் சிட்டிங் தொகுதியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துள்ளனர். 2016 தேர்தலில் கோவை தெற்கில் வென்ற அம்மன் அர்ஜுனன் 2021ல் வானதி சீனிவாசனுக்கு அதை விட்டுக்கொடுத்து வடக்கில் போட்டியிட்டார். இம்முறை கோவை வடக்கில் வானதி களமிறங்குவதாக சொல்லப்படும் நிலையில் அம்மன் அர்ஜுனன் மீண்டும் தெற்கில் போட்டியிடவுள்ளார்.

    அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு அடுத்த கட்டமாக வெளியிடுவார் என தெரிகிறது.இன்னும் கோகுல இந்திரா உள்ளிட்டோரின் பெயர்கள் வராததால் 3ஆவது கட்ட பட்டியலில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவின் முதல் வேட்பாளர்!. பட்டியல் வெளியாகும் முன்பே தொகுதியை அறிவித்த நயினார்!
    Next Article அதிமுக புறக்கணித்துவிட்டது!. 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. கிருஷ்ணசாமி அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    July 6, 2026

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    July 6, 2026

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.