Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?. 121 இடங்களில் திமுக – அதிமுக இடையே நேரடி யுத்தம்!
    தமிழ்நாடு

    கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?. 121 இடங்களில் திமுக – அதிமுக இடையே நேரடி யுத்தம்!

    Editor web3By Editor web3March 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk vs admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமு‌க மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடப் பேரியக்கங்களும் தங்கள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். இது கடந்த தேர்தல்களை விட இரு கட்சிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.

    கூட்டணி கட்சிகளின் பலத்தையும் கணக்கில் கொண்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளையும் சேர்த்து, மொத்தம் 133 தொகுதிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நேரடி மோதல் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இரு கட்சிகளின் வாக்கு வங்கியைச் சரியாகக் கணிக்கும் களமாகவும் இது அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் பி. சந்தானகிருஷ்ணனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து ஆதி ராஜாராமும் களம் காண்கின்றனர். சென்னையின் பெரும்பாலான தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளதால், தலைநகரில் தேர்தல் களம் இப்போதே உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது.

    சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் DCM உதயநிதியை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 2021-ல் CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முன்னதாக, 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் CM ஸ்டாலினை விட 2,468 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆதிராஜாராம் தோல்வியடைந்திருந்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை தொடக்கம்!. வேட்புமனு தாக்கலின்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி!. தேர்தல் ஆணையம்!.
    Next Article படையெடுத்த மக்கள்… அலறும் வெள்ளை மாளிகை!. டிரம்ப் பதவி விலகக்கோரி மெகா போராட்டம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.